Sunday, May 31, 2009

'சரி நீ எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்' , ஆறுமுகம் கண்ணடித்தான். 'நீ சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது ,இரண்டு கயிறுக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளகூடாதே ',என்று நான் சொன்னதும் என் தலையில் ஒரு தட்டுதட்டி ' இது இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதை மாதிரிதான்,இரண்டு பக்கமும் சாயக்கூடாது கீழேயும் விழக்கூடாது ,புரியுதா .ஒழுங்கா சீக்கிரம் திருமணப்பத்திரிக்கை அனுப்பிவை 'என்று கட்டளையிட்டான் . அதை ஏற்றுக்கொண்டேன் . எங்கள் இருவருக்கும் மிக அருகில் பின்பக்கம் மிதிவண்டிஒன்று மணியடித்தபடி உரசிக்கொண்டு வந்து நின்றது , திரும்பிப்பார்த்தால் ஆறுமுகத்தின் மாமா மகன் செல்வம் ' மச்சான் ஓரமாக போகக்கூடாதா இன்னும் கொஞ்சம்னா இடிதிருப்பேன் ' டோய் மாப்பிள்ளை எங்கள இடிச்சுட்டு நீ வீடு போய் சேரமாட்டாய் ' என்று வண்டியை பிடித்து இழுத்தான் ,கீழே விழப்போன அவனை தூக்கி நிறுத்தி ' போ மாப்பிள்ளை ஒழுங்கா வீடு போய் சேர் ' என்று அனுப்பிவைத்தான் . உறவுகளுக்குள் கிண்டல் கேலி செய்வதே ஒரு தனி சுகம் தெரியுமா ,அது உள் மனதில் மகிழ்ச்சியை தருகிறது , உறவுகளே இல்லை என்றால் ஒருவன் பைத்தியமாகிவிடுவான் தெரியுமா என்றேன் . 'தமிழ் இந்த கிராம வாழ்கையில் உறவுகள் அதிகம் , நல்லது கெட்டது எது என்றாலும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் ,அங்கு பகைமை போய்விடும் நன்மையே நடக்கும் ' இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே நடந்தோம் ,மீண்டும் பள்ளிக்கூடம் அருகில் வந்துவிட்டோம் .அந்த தமிழ் ஆசிரியர் பெண் பிள்ளைகளுக்கு பாரதியாரின் கும்மியடி பாட்டுக்கு நடனம் சொல்லிக்கொடுதுக்கொண்டிருந்தார் ,பிள்ளைகளும் காலை பின்னிப்பின்னி கோலால் தட்டித்தட்டி அழகாக ஆடிக்கொண்டிருந்தன. ஒரே மாதிரி அந்த கோல் தட்டப்படும் போது ஏற்ப்படும் ஓசையும், பாட்டின் இனிமையும் நமது நடன கலாச்சாரத்தை பறைசாற்றின .

No comments: