Thursday, February 12, 2009

தொடர்ச்சி - நான் தமிழ் , சென்னையிலிருந்து வருகிறேன் ,சொல்லிமுடிப்பதற்குள் ,'வாடாவா ,இன்றுதான் உனக்கு வழி தெரிந்ததா '- உள்ளேயிருந்துவந்தான் ஆறுமுகம் ,திண்ணையில் இருந்த வாளி நீரில் முகம் ,கை. பாதங்களை கழுவிக்கொண்டேன் ( எப்பொழுதும் திண்ணையில் ஒரு வாளியில் நீரும் ,ஒரு குவளையும் இருக்கும் ) கையில் ஒரு துவட்டும் துண்டுடன் அவனின் தாய் 'என்னப்பா தமிழ் ஆறு திருமணத்திற்கு வராமல் இருந்துவிட்டாய் 'என்னம்மா செய்றது என் வேலை அப்படி ' என்றேன் .முகத்தை துடைத்துக்கொண்டே ,தலையை குனிந்து ( முன் வாசல் நிலை உயரம் குறைவாக இருக்கும் ) உள்ளே சென்றேன் .ஆறுமுகத்தின் தந்தை சிரித்த முகத்துடன் குங்கும பொட்டு வைத்து ,மடியில் கை வைத்து, வெள்ளை வேட்டி சட்டையுடன் ஓய்யாரமாக உயரே மாலையிட்ட புகைப்படத்தில் அமர்ந்து எனை பார்த்தார்,அவரை வணங்கி ,அருகே தட்டில் இருந்த திருநீரை நெற்றியில் இட்டுக்கொண்டேன் , ( எங்கோபடித்த ஒரு புதுக்கவிதை ஞாபகம் வந்தது 'திண்ணையிலேயே வாழ்ந்த எங்கள் தாத்தா வீட்டிற்க்குள் வந்தார் புகைப்படமாக ') இந்த கவிதைக்கும் ஆறுமுகத்தின் தந்தைக்கும் நேர் எதிர் . அவர் காலடி சப்தம் கேட்டாலே வீடு நிசப்தமாகிவிடும் ,மிகவும் கண்டிப்பானவர் .அவர் இறந்து பல வருடம் சென்றும் அவர் கண்டிப்பு கண்களில் தெரிந்தது .

No comments: