Thursday, January 29, 2009

கோவிலிலிருந்து வலது கை பக்கம் திரும்பினால் நான்காவது வீடு என் நண்பன் ஆறுமுகத்தின் வீடு வெள்ளை சுண்ணாம்பு அடித்து வாசலில் சாணம்தெளித்து நடுவில் கோலமிட்டு அதன் நடுவில் பூசணி பூ வைத்து அழகாக காட்சியளித்த அந்தவீட்டின் திண்ணையில் அமர்ந்து "ஆறுமுகம் 'என்று கூப்பிடவுடன் ,மஞ்சள்பூசிய வட்ட முகமும் நெற்றியில் குங்குமம் தழையகட்டிய புடவையும் ,வெள்ளிகொலுசும் வளையல் சப்தமும் சேர்ந்து வந்த மகாலட்சுமியை பார்த்தவுடன் கும்பிட்டன என் கைகள் .அவர்களோ 'நீங்கள் யார் '-தொடரும்

Thursday, January 15, 2009

1989 - 2009

காலைகதிரவன் பொன்னிற விரல்களால் பூமி குழந்தையை தடவி உச்சி முகர்ந்து எழுப்பியபோதே நான் அந்த கிராமத்தில் பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன், இதமான காற்றும் இனிமையான குயிலின் குரலும், கூரையின் மேல் சிறகடித்து கூவும் சேவலும், பூப்பூவாய் தேன் தேடும் பட்டாம்பூச்சியும், பாலுடன் காத்திருக்கும் பசுவின் குரலும், அதை தொடர்ந்து கேட்கும் ஓடிவரும் கன்றின் குரலும், காளையின் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சப்தமும், எனை கடந்துபோக நான் நடந்துபோக அந்த தெருமுனை பிள்ளையார் கோவிலில் கால்கள் நின்றன. குடைபோல் விரிந்த அரசமரத்தடியில் எருக்கமாலை அணிந்த பிள்ளையாரை என்கைகள் தானாகவே கும்பிட்டன என்மனமோ இந்த இனிமையான உலகத்தில் எனை படைத்த இறைவனின் திருவடியில் சரணடைந்தது - தொடரும்

௧௯௯௯

Sunday, January 11, 2009


இன்பம் எங்கும் பொங்க
பொங்கி பரவி தங்க
மணிகள் வாழ்த்தொலி முழங்க
மஞ்சள் குங்குமம் மணக்க
வாழ்கை கரும்பாய் இனிக்க
நீங்கள் நலமாய் வாழ
எங்கள் பொங்கல் வாழ்த்து