Monday, September 14, 2009
மிக அகலமான சாலை இரு புறமும் வெட்டப்பட்ட மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தோன்றியிருக்கும் சிறு வீடுகள் நடுநடுவே சில மாடிவீடுகள்,பேருந்து வழுக்கிக் கொண்டு ,புதிதாக வந்த திரைப்பட பாடலுடன் சென்றுகொண்டிருந்தது . மெல்லிய பனிகாற்று ,வான போர்வையை விலக்கி சிவந்த கண்களுடன் சிரிக்கும் சூரியக்குழந்தையின் மென்மையான கதிர் கைகள் இவை உடலுக்கும் மனதிற்கும் இதமாக இருந்தது . நான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தின் பெயரை நடத்துனர் ஓங்கி ஒலிக்க ,பரவாயில்லை அரை மணி நேரத்தில் வந்துவிட்டோம் என் மனம் மகிழ ,கால்கள் இறங்கி நடக்க ஆரம்பித்தன , படபடக்கும் பட்டாம் பூச்சிகளையும் , காளைமாடுகளையும் , கறவை மாடுகளையும் ,கிராமத்திற்கே உரிய சலசலப்பையும் காணவில்லை , இன்னும் சொல்லப்போனால் காலை ஆறு மணியாகியும் எந்த வீடும் திறக்கப்படவில்லை .சாலை அகலமாக்கம் செய்யபட்டிருந்ததால் விநாயகர் வீற்றிருந்த அரச மரம் அங்கு இல்லை ,விநாயகரோ ஒரு வீட்டு சுவற்றில் ,கூண்டுக்குள் அடைக்கப்பட்டு விளக்கு கூட ஏற்றப்படாமல் அமர்ந்திருந்தார் .என் கைகள் குவிந்தன ,என் மனம் குவியவில்லை .சற்றுதூரத்தில் உள்ள என் ஆறு வீட்டை பார்த்தால் பழைய வீடு இல்லை சிறிய தளம் போட்ட வீடு இருந்தது .அருகே சென்றால் உள் பக்கம் தாழ்பாள் போட்டிருந்தது 'ஆறு ஆறு ' இருமுறை குரல் கொடுத்ததும் யாரும் வரவில்லை .லேசாக கதவை தட்டியபோது ,'யாருடா இவ்வளவு சீக்கிரம் வந்து கதவை தட்டுவது , முனகியபடியே ஆறு வந்தான் , என்னடா ஆறு எப்படியிருக்கிறாய் என்றவுடன் ,இருக்கிறேன் .ஆமா இவ்வளவு சீக்கிரமா ஏன்டா வந்த , நாங்க எழுந்துக்க மணி ஏழு ஆகுமே , சரி சரி வா சலிப்புடன் கதவைத்திறந்தான் .ஐந்து மணிக்குள் எழுந்து குளித்துவிடும் கிராம மக்கள் இப்பொழுது எழுவது ஏழு மணி -இதுதான் கால மாற்றம் என்பதா - என்மனம் என்னை கேள்வி கேட்டது - எனக்கு பதில் தெரியவில்லை .
Sunday, July 19, 2009
2009 மார்கழி மாதம் மீண்டும் வருகிறேன் ....
இதுவரை என் நெருங்கிய நண்பன் ஆறுமுகத்தின் கிராமத்தில் உள்ள அவனது வீட்டிற்க்கு 1989 ஆம் ஆண்டு சென்று வந்ததை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் .
20 வருடங்கள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் அவனது கிராமத்திற்கு வந்திருக்கிறேன் , இனி அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் .
அந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது ,
இவை அனைத்தும் நல்லதா தீயதா என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,
தங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் , புரிந்ததை எனக்கும் தெரிவித்தால் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் .

Thursday, July 16, 2009
காலம் கரையத் தொடங்கியது ,சூரியன் தன் வர்ண வித்தைகளை வானத்திரையில் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வந்து வீட்டிற்க்கு சென்று விட்டான் ,நாங்களும் வீட்டிற்க்கு வந்து விட்டோம், கறந்த பசும் பாலில் போட்ட காபியில் பறந்த வாசனை மூக்கு வழியாக மூளைக்குள் சென்றது .மூளை சுறுசுறுப்பானது ,மாலை மணி ஆறை தாண்டியிருந்தது .ஆறுவின் அக்காள் நிலவொளி வந்திருந்தார்கள் ,எனை பார்த்து டேய் ' நீ தமிழா ' என்றார்கள் .'இல்லை நான் தெலுங்கு' என்றேன் .டேய் இன்னும் அந்த வாய் கொழுப்பு அப்படியே இருக்குதுடா ( எனது அம்மா அப்பாவை விசாரித்தார்கள் - நன்றாக இருக்கிறார்கள் என்றேன் ) அப்பொழுது இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று அக்காவின் காலை ஓடிவந்து கட்டிக்கொண்டது .' அக்கா இது யாருக்கா ' என்று அந்த குழந்தையை தூக்கினேன்,அது விசும்ப ஆரம்பித்தது , ' உன் பெயர் என்ன என்றேன் . அழவே ஆரம்பித்து விட்டது , அக்காவாங்கிக்கொண்டு .அவ பெயர் மின்மினி என்றார்கள் , என்ன அருமையான பெயர் என்று நான் சொல்ல ,ஆறுமுகமோ ' மின்மினிபூச்சின்னு பெயர் வைத்திருக்கலாம் ,கையையும் காலையும் பாரு சின்னசின்னதா பூச்சி மாதிரியே ' அக்காவுக்கு கோபம் வந்தது
'அவ கலரப்பாருடா ' என்றார் . ஆறுவும் விடுவதாக இல்லை . 'ஆமா கரிச்சட்டி மாதிரியே இருக்கு' என்றவுடன் ,அக்காவுக்கு கோபம் அதிகமாகி , அம்மாவிடம் ' அவனை வாயை மூட சொல்லுங்கம்மா ,இல்லேன்னா அவ அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு ' என்று சொல்ல . ஆமா மச்சான் என்ன பெரிய சூரரா , இரண்டு சிங்கத்தை கட்டி ஏர் உளுதரா ,அப்படியே பயந்துருவோம் ' என்று சொல்லிமுடிப்பதற்குள் ,ஆறுவின் மச்சானே உள்ளே வந்தார் . ' வாங்க மச்சான்
உக்காருங்க என்று நாற்காலியை எடுத்து போட்டான் . ( எதுவுமே நடக்காதது போல் ) அக்கா விடவில்லை ' இதபாருங்க நம்ம பொண்ண கரிச்சட்டியாம் ,பூச்சியாம், அதுபரவாயில்லை ,மச்சான் என்ன இரண்டு சிங்கத்த கட்டி உளுதரா .என்ன பண்ணிடுவாருன்னு கேட்கிறாங்க , நீங்க என்னென்னு கேளுங்க ' என்று போட்டுக்கொடுக்க ,மச்சானோ லேசாக சிரித்தவாறே ' என்ன மாப்பிளே ' ஒங்க அக்காவையே கெட்டியிருகேன் ,சிங்கத்தயா கெட்டமுடியாது ' என்றார் ,எல்லோரும் சிரிக்க , வீடே கலகலப்பானது . ( இந்தமாதிரி சந்தோஷம் எங்கு இருக்கிறதோ அங்கு நோய் இருக்காது ) ' சரி ஆறுமுகம் நான் கிளம்புகிறேன் ,பேருந்துக்கு நேரமாகிறது ' என்றேன் . எட்டு மணிக்குதான் பேருந்து அதற்க்குள்
சாப்பிடலாம் வா ' என்றான் .அக்கா .மச்சான் . குழந்தை, நான் எல்லோரும் சாப்பிட அமர்ந்தோம் , சுடச்சுட சோறும் பசும் பாலும் ,வீட்டில் சுட்ட முறுக்கும் , வாழைப்பழமும் மீண்டும் வயிற்றை நிரப்ப ,இன்று நடந்த எல்லாம் என் மனதை நிரப்ப , கையை மட்டும் கழுவிக்கொண்டேன் . அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டேன் .பேருந்து ஏற்ற ஆறு வந்தான் ,பேருந்தின் முன் முகப்பு விளக்கு தெரிய ஆரம்பித்ததும் ,என் கையை பிடித்துக்கொண்டான் ,'டேய் அடிக்கடி வாடா ' என்றான் .அருகில் வந்த பேருந்தின் முகப்பு வெளிச்சம் ,அவன் கண்களில் பெருக்கெடுத்து நின்ற நீரில் பட்டு எதிரொளித்தது . சரி என்ற வார்த்தைக்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை .நட்பு தொண்டையை அடைத்துக்கொண்டது .பேருந்து அருகில் வந்தது . என் உடல் ஏறிக்கொண்டது . மனதோ சிரமப்பட்டு உள்ளே திணிதுக்கொண்டது . இருவரும் கையசைதுக்கொண்டோம் , மனதை அசைக்க முடியவில்லை . -தொடரும்

Sunday, May 31, 2009
'சரி நீ எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்' , ஆறுமுகம் கண்ணடித்தான். 'நீ சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது ,இரண்டு கயிறுக்கும் நடுவில் மாட்டிக்கொள்ளகூடாதே ',என்று நான் சொன்னதும் என் தலையில் ஒரு தட்டுதட்டி ' இது இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதை மாதிரிதான்,இரண்டு பக்கமும் சாயக்கூடாது கீழேயும் விழக்கூடாது ,புரியுதா .ஒழுங்கா சீக்கிரம் திருமணப்பத்திரிக்கை அனுப்பிவை 'என்று கட்டளையிட்டான் . அதை ஏற்றுக்கொண்டேன் . எங்கள் இருவருக்கும் மிக அருகில் பின்பக்கம் மிதிவண்டிஒன்று மணியடித்தபடி உரசிக்கொண்டு வந்து நின்றது , திரும்பிப்பார்த்தால் ஆறுமுகத்தின் மாமா மகன் செல்வம் ' மச்சான் ஓரமாக போகக்கூடாதா இன்னும் கொஞ்சம்னா இடிதிருப்பேன் ' டோய் மாப்பிள்ளை எங்கள இடிச்சுட்டு நீ வீடு போய் சேரமாட்டாய் ' என்று வண்டியை பிடித்து இழுத்தான் ,கீழே விழப்போன அவனை தூக்கி நிறுத்தி ' போ மாப்பிள்ளை ஒழுங்கா வீடு போய் சேர் ' என்று அனுப்பிவைத்தான் . உறவுகளுக்குள் கிண்டல் கேலி செய்வதே ஒரு தனி சுகம் தெரியுமா ,அது உள் மனதில் மகிழ்ச்சியை தருகிறது , உறவுகளே இல்லை என்றால் ஒருவன் பைத்தியமாகிவிடுவான் தெரியுமா என்றேன் . 'தமிழ் இந்த கிராம வாழ்கையில் உறவுகள் அதிகம் , நல்லது கெட்டது எது என்றாலும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் ,அங்கு பகைமை போய்விடும் நன்மையே நடக்கும் ' இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே நடந்தோம் ,மீண்டும் பள்ளிக்கூடம் அருகில் வந்துவிட்டோம் .அந்த தமிழ் ஆசிரியர் பெண் பிள்ளைகளுக்கு பாரதியாரின் கும்மியடி பாட்டுக்கு நடனம் சொல்லிக்கொடுதுக்கொண்டிருந்தார் ,பிள்ளைகளும் காலை பின்னிப்பின்னி கோலால் தட்டித்தட்டி அழகாக ஆடிக்கொண்டிருந்தன. ஒரே மாதிரி அந்த கோல் தட்டப்படும் போது ஏற்ப்படும் ஓசையும், பாட்டின் இனிமையும் நமது நடன கலாச்சாரத்தை பறைசாற்றின .
Wednesday, May 6, 2009
சுற்றிப்பார்த்தால் சற்று தொலைவில் ஆறு வந்து கொண்டிருந்தான் .அருகில் வந்தவன் "என்னடா தூங்கிவிட்டாயா"என்றபடி கட்டிலில் அமர்ந்தான் ."ஆமாடா இதுவரை சாப்பிடாத ருசியான நமது பாரம்பரிய சாப்பாடு ,அதிகமாக போட்டு விட்டாய் அதனால்தான் தூக்கம் "அப்ப உன் மேல் தப்பில்லை ,சாப்பாடு போட்டவன் மேல்தான் தப்பு ,என்று சிரித்தான் ."டேய் மனிதன் யாராவது தான் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளனா ,நானும் சராசரி மனிதன்தான் ,மகாத்மா அல்ல " "இன்னும் நீ மாறவில்லை எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறாய் " என்றான். மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் ,சற்று தொலைவில் உள்ள குளத்தில் முகத்தை கழுவினோம். மீன்கள் துள்ளிகுதித்து விளையாடின ,சிறு வயதில் துண்டை விரித்து மீன் பிடித்த ஞாபகம் வந்து போனது ,இனி அந்த நாட்கள் திரும்ப வருமா ,இதோ நாங்கள் கபடி விளையாடிய களம் இப்போதும் சில சிறுவர்கள் விளையடிக்கொண்டிருந்தார்கள் ,என் மனம் ஏங்கியது ,பெருமூச்சும் வந்தது .சிறிது தூரம் நடந்தோம் . " சரி ஆறு திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது "என்றேன்.அவனோ " திருமணத்துக்கு முன்பு எப்போது எப்போது என்று கேட்ட மனது .திருமணம் முடிந்து ஒரு வாரம் நன்றாகவே இருந்தது ,ஒரு மாதத்தில் லேசான சலிப்பு தட்டியது ,இப்போது ஆறு மாதமாகிவிட்டது,லேசாக புரிய ஆரம்பித்திருக்கிறது ,பாசக்கயிற்றுக்கும் ,தாலிக்கயிற்றுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டேன் என்று " " எனக்குப்புரியவில்லை " என்றேன் . " ஆமாடா தாய் என்கிற பாசக்கயிற்றுக்கும் , மனைவி என்கிற தாலி க்கயிறுக்கும் நடுவில் வில்லாய் வளைந்து கொடுக்கிறேன் .தாயிடம் பாசம் இருக்கிறது ,மனைவியிடம் ஆசை இருக்கிறது ,இது இரண்டுமே எனக்கு தேவைப்படுகிறது ,ஆனால் அவர்களோ ஏதாவது ஒன்றுதான் வேண்டும் என்கிறார்கள் .என்னசெய்வது இரண்டுக்கும் நடுவில் நிற்க்கிறேன் " என்றான் - தொடரும் ( பிழையிருந்தால் பொறுத்தருள்க)
Friday, May 1, 2009
இருவரும் மெதுவாக வரப்பின் மீது நடந்தோம்,கடந்த கால நினைவுகள் எங்கள் மனதை நனைத்திருந்தது ,வெளியில் வெயில் அடித்தாலும் மனம் குளிர்ந்திருந்தது ,பாதி வயலை கூட கடந்திருக்கமாட்டோம் மதியம் மணி ஒன்றை கடந்திருந்தது , ஒரு பெண் தலையில் சாப்பாட்டு கூடையுடன் வந்து "அய்யா,அம்மா சாப்பாடு கொடுத்துவிட்டிருக்கிறார்கள் சூடாக சாப்பிட சொன்னார்கள் "என்றார்.இருவரும் அருகில் இருந்த புங்கை மரத்தடியில் உட்கார்ந்தோம் . தலைவாழையில் முதலில் இனிப்பு பணியாரம் வைத்தார்கள் மூக்கில் சென்ற வாசனை நாக்கில் எச்சில்வூற வைத்தது ,சுவைத்தேன், தேனடை தோற்றது . அடுத்து வைத்த உளுந்த வடையோ பஞ்சாய் வாயில் கரைந்தது , வெள்ளிநூல் போலிருந்த அரிசி சாதமும், அதில் போட்ட முருங்கை கீரை சாம்பாரும் நாக்கை சப்புக்கொட்ட வைத்தது, போதும் என்று சொல்ல வாய் வரவில்லை ,கடைசியாக பால் பாயசம் தொண்டை வழியாக வழுக்கி இதயத்தையே நிறைத்தது . சாப்பிட்டு முடித்தோம் அருகில் இருந்த கயிற்று கட்டிலில் சிறிது படுக்கலாம் என்று படுத்தேன் ,பாய் சுருட்டுவது போல் என் கண் இமை மூடிக்கொண்டது ,என்னை அறியாமலே தூக்கம் எனை தூக்கி சென்றது , கண் திறந்து பார்த்தபோது மணி நான்கை நெருங்கி இருந்தது - தொடரும்
Tuesday, April 28, 2009
ஐந்து நிமிட நடைபயண தூரத்தில் அவனுடைய வயல், பத்து ஏக்கருக்குமேல் இருக்கும்,வரப்புகள் கட்டம் கட்டமாக வெட்டப்பட்டு தண்ணீர் பாயச்சபட்டிருந்தது .மூளைக்குள் சதுரங்ககட்டம் ஞாபகம் வந்தது .ஒரு பாத்தியில் மட்டும் இளம் பச்சை நிறத்தில் நாற்று வளர்க்கப்பட்டு அதன் தலையினை காற்று வருடிக்கொண்டிருந்ததால் பார்ப்பதற்கு பச்சை பட்டுக்கம்பளத்தில் காற்று உள் புகுந்து அலையை ஏற்படுத்தி வெளி வருவதுபோல் இருந்தது .சற்று தூரத்தில் இரண்டு ஆண்களும் சில பெண்களும் நின்று கொண்டிருந்தனர் ஆறுமுகத்தை பார்த்ததும் "வாங்க அய்யா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம் "என்று கூறி தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்களை ஆறுமுகத்திடம் கொடுத்தனர் ."என்னடா இன்று புதிய வேலை ஆரம்பிக்கின்றார்களா" "ஆமாடா நல்லநாளில்தான் நீ வந்திருக்கிறாய் "என்று கூறி தாம்பாளத்தை கையில் எடுத்து தீபம் ஏற்றி சூரியனுக்கும் ,வயல் வரப்பில் நடந்து சென்று நாற்றுக்கும் காண்பித்தான்,கூடவே ஒரு பெண் சிறிய பித்தளை மணியை அடித்துக்கொண்டு வந்தாள் .ஓரிடத்தில் தாம்பாளத்தை வைத்துவிட்டு தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான், பின் தட்டில் இருந்த திருநீற்றை நெற்றியில் இட்டுகொண்டான் ,நானும் இட்டுக்கொண்டேன் ,தட்டில் சில புதிய பத்து ரூபாய்களை வைத்தான்,அவற்றை எடுத்துக்கொண்ட மாடசாமியின் ( வேலையாள் ) முகத்தில் எத்தனை புன்முறுவல் ( அந்த சிரிப்பில் நான் இறைவனை கண்டேன் ) அவனே அதை வைத்துக்கொள்ளவில்லை ,உடன் வேலை செய்பவர்களை அழைத்து "இந்தா அய்யா கொடுத்தாரு "என்று பிரித்து கொடுத்தான் .அவர்கள் முகத்திலும் இறைவன் பரவினான்."அய்யா நீங்கள் முதல் நாற்றை எடுத்து கொடுங்கள் நாங்கள் வேலையை ஆரம்பிக்கிறோம் " என்று மாடசாமி கூற ,ஆறுமுகம் வேட்டியை மடித்து கட்டி நிலத்தில் இறங்கி ஒரு நாற்றை எடுத்து அதனை முத்தமிட்டு மாடசாமியிடம் கொடுக்க மாடசாமியும் மற்றவர்களும் நட ஆரம்பித்தார்கள் .எனக்கும் இறங்கி நட வேண்டும் என ஆசை ,ஆனால் என்
உடை ( குழாய்தான் ) என் ஆசையை தடுத்தது.அங்கு அது வேட்டியை போல் உதவவில்லை . ஆறுமுகம் நிலத்தில் இருந்து வரப்பிற்கு வந்தான் ."என்னடா ஆறு நாற்றுக்கு முத்தம் கொடுத்தால் நன்றாக வளருமா " என்றேன் .சிரித்துக்கொண்டே சொன்னான் " தமிழ்,எங்க அய்யா ( அப்பாவை இப்படித்தான் அழைப்பான் ) ஒரு தாய் தன் பிறந்த குழந்தையை எப்படி தன்னுடன் அனைத்து முத்தமிடுவளோ அது போல் உனது சொந்த மண்ணில் விளையப்போகும் இந்த நாற்றை முத்தமிடு அது செழித்து வளர்ந்து உன்னையும் ,மண்ணையும் வாழவைக்கும் என்று சொல்வார்கள் ,அவருக்குப்பின் என்னையும் இந்த மண்ணையும் வாழ்வாங்கு வாழ வைத்தது அவரின் இந்த அறிவுரைதான் .நான் இந்த நாற்றை என் குழந்தையாகதான் பார்க்கிறேன் , ஒரு குழந்தைக்கு பசி எடுத்தால் தாய் எப்படி பசிஆற்றுகிறாளோ அது போல் உரம் போட வேண்டிய நேரத்தில் உரம் போட்டும் ,நீர் ஊற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நீர் ஊற்றியும் நான் வளர்க்கிறேன் ,அது என்னையும் என் குடும்பத்தையும் வளர்க்கிறது"என்றான்.அவனுக்கு இந்த உழவுத்தொழில் மேல் இருந்த பாசம் ,என் கண் வயலில் நீரை தேக்கியது .( தொடரும் )

Sunday, March 1, 2009
இருவருக்கும் தலைவாழை இலையில் இட்டிலியும்,
சட்டினியும், சாம்பாரும் பரிமாறினார்கள் . இட்டிலி தொடும்போது மல்லிகைப்பூவையும் ,வாயில் இடும்போது பனிக்கட்டியையும் ஞாபகப்படுத்தியது .இந்த வாசனையும் ருசியும் வேறெங்கும் இதுவரை
கிடைக்கவில்லை.வயிறு முட்ட சாப்பிட்டோம் ,கை கழுவ தட்டு கொடுத்தார்கள் கை கழுவிய பின் கையை ஊன்றி எழுந்தோம் .பத்து நிமிடம் கழித்து ஆறுவும் நானும் அவனுடைய வயலுக்கு கிளம்பினோம்( ஆறுமுகத்துக்கு விவசாயம்தான் முழுநேர தொழில் .என்னுடன் கல்லூரி வரை படித்திருந்தாலும் ,விவசாயம் அவனுக்கு மிகவும் பிடித்தது )
வழியில் அவனை பார்த்த பெரியவர்கள் 'என்ன தம்பி வயலுக்கா ' என்றார்கள் .சிறியவர்கள் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு வணக்கம் சொன்னார்கள் .அவனுடன் நடப்பதற்கே கம்பீரமாக இருந்தது .வழியில் எதிரில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் ஒரு தோளில் பையை போட்டும் மறு தோளில் நண்பர்களின் கையை போட்டும் எங்களை கடந்து போனார்கள் .இதோ நாங்கள் படித்த பள்ளிக்கூடம்,சைக்கிளில் வந்து இறங்கிய எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வகுப்பு ஆசிரியருக்கு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வணக்கம் சொன்னோம் .அவரும் பதில் வணக்கம் சொல்லி 'என்னடா தமிழ் எப்பொழுது வந்தாய் ,
என்ன செய்கிறாய் ,கவிதை கதைகளெல்லாம் எழுதுகிறாயா'என்றார் .
'நான் சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் ,கவிதை எழுத நேரம் இல்லை அய்யா ' என்றேன் .'சரி எங்களை எல்லாம் மறந்து விடாதே 'என்றார் . 'எப்படி அய்யா ,எழுத்தறிவித்தவன் இறைவன்றோ '
என்பதிலில் அகம் மலர்ந்தார் ,அது முகத்தில் தெரிந்தது.பள்ளிமணி அடித்தது நடந்த சிறுவர்கள் ஓட ஆரம்பித்தார்கள் .ஆசிரியரும் உள்ளே சென்றுவிட்டார் .மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் .......தொடரும்

Thursday, February 12, 2009
தொடர்ச்சி - நான் தமிழ் , சென்னையிலிருந்து வருகிறேன் ,சொல்லிமுடிப்பதற்குள் ,'வாடாவா ,இன்றுதான் உனக்கு வழி தெரிந்ததா '- உள்ளேயிருந்துவந்தான் ஆறுமுகம் ,திண்ணையில் இருந்த வாளி நீரில் முகம் ,கை. பாதங்களை கழுவிக்கொண்டேன் ( எப்பொழுதும் திண்ணையில் ஒரு வாளியில் நீரும் ,ஒரு குவளையும் இருக்கும் ) கையில் ஒரு துவட்டும் துண்டுடன் அவனின் தாய் 'என்னப்பா தமிழ் ஆறு திருமணத்திற்கு வராமல் இருந்துவிட்டாய் 'என்னம்மா செய்றது என் வேலை அப்படி ' என்றேன் .முகத்தை துடைத்துக்கொண்டே ,தலையை குனிந்து ( முன் வாசல் நிலை உயரம் குறைவாக இருக்கும் ) உள்ளே சென்றேன் .ஆறுமுகத்தின் தந்தை சிரித்த முகத்துடன் குங்கும பொட்டு வைத்து ,மடியில் கை வைத்து, வெள்ளை வேட்டி சட்டையுடன் ஓய்யாரமாக உயரே மாலையிட்ட புகைப்படத்தில் அமர்ந்து எனை பார்த்தார்,அவரை வணங்கி ,அருகே தட்டில் இருந்த திருநீரை நெற்றியில் இட்டுக்கொண்டேன் , ( எங்கோபடித்த ஒரு புதுக்கவிதை ஞாபகம் வந்தது 'திண்ணையிலேயே வாழ்ந்த எங்கள் தாத்தா வீட்டிற்க்குள் வந்தார் புகைப்படமாக ') இந்த கவிதைக்கும் ஆறுமுகத்தின் தந்தைக்கும் நேர் எதிர் . அவர் காலடி சப்தம் கேட்டாலே வீடு நிசப்தமாகிவிடும் ,மிகவும் கண்டிப்பானவர் .அவர் இறந்து பல வருடம் சென்றும் அவர் கண்டிப்பு கண்களில் தெரிந்தது .
Tuesday, February 3, 2009
பிறந்தநாள் வாழ்த்து
குன்றின் மேலிட்ட விளக்காய்
விளக்கின் சுடரொளியாய்
குலத்தின் பெருமையை நிலைநாட்டும்
ஆழ்கடலின் வெண்சங்காய்
என்றும் ஒளிவீசும் சுடர்முத்தாய்
வாழ்க ,வாழ்க ,வளமுடன் வாழ்க
விளக்கின் சுடரொளியாய்
குலத்தின் பெருமையை நிலைநாட்டும்
ஆழ்கடலின் வெண்சங்காய்
என்றும் ஒளிவீசும் சுடர்முத்தாய்
வாழ்க ,வாழ்க ,வளமுடன் வாழ்க
Thursday, January 29, 2009
கோவிலிலிருந்து வலது கை பக்கம் திரும்பினால் நான்காவது வீடு என் நண்பன் ஆறுமுகத்தின் வீடு வெள்ளை சுண்ணாம்பு அடித்து வாசலில் சாணம்தெளித்து நடுவில் கோலமிட்டு அதன் நடுவில் பூசணி பூ வைத்து அழகாக காட்சியளித்த அந்தவீட்டின் திண்ணையில் அமர்ந்து "ஆறுமுகம் 'என்று கூப்பிடவுடன் ,மஞ்சள்பூசிய வட்ட முகமும் நெற்றியில் குங்குமம் தழையகட்டிய புடவையும் ,வெள்ளிகொலுசும் வளையல் சப்தமும் சேர்ந்து வந்த மகாலட்சுமியை பார்த்தவுடன் கும்பிட்டன என் கைகள் .அவர்களோ 'நீங்கள் யார் '-தொடரும்
Thursday, January 15, 2009
1989 - 2009
காலைகதிரவன் பொன்னிற விரல்களால் பூமி குழந்தையை தடவி உச்சி முகர்ந்து எழுப்பியபோதே நான் அந்த கிராமத்தில் பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன், இதமான காற்றும் இனிமையான குயிலின் குரலும், கூரையின் மேல் சிறகடித்து கூவும் சேவலும், பூப்பூவாய் தேன் தேடும் பட்டாம்பூச்சியும், பாலுடன் காத்திருக்கும் பசுவின் குரலும், அதை தொடர்ந்து கேட்கும் ஓடிவரும் கன்றின் குரலும், காளையின் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சப்தமும், எனை கடந்துபோக நான் நடந்துபோக அந்த தெருமுனை பிள்ளையார் கோவிலில் கால்கள் நின்றன. குடைபோல் விரிந்த அரசமரத்தடியில் எருக்கமாலை அணிந்த பிள்ளையாரை என்கைகள் தானாகவே கும்பிட்டன என்மனமோ இந்த இனிமையான உலகத்தில் எனை படைத்த இறைவனின் திருவடியில் சரணடைந்தது - தொடரும்
Subscribe to:
Posts (Atom)